திருச்சி சஞ்சீவி நகர் அருகே செடிகள் கொடிகளுக்கு அருகே மூன்று லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று மாலை திடீரென செடி கொடிகள் பற்றி எரிந்தது.
அப்பொழுது அருகில் இருந்த மூன்று லாரிகளுக்கும் இந்த தீ பரவி லாரியின் பின்பக்கம் முழுவதும் எரிய துவங்கியது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை தெரிந்ததை கண்டு வாகன ஓட்டிகள் ஏதோ பெரிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது என அச்சமடைந்தனர். இந்த தீ விபத்தில் மூன்று லாரிகள் எரிந்து பின்புற பகுதி சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments