திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் தொழிற்சங்கங்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதில் திருச்சி மாநகராட்சி ஆணையர்,
காவல் துறையினர் தொடர் பேச்சுவார்த்தை ஈடுபட்டு உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பின்புறமும் மற்ற தொழிற்சங்கங்களுக்கு பேருந்து நிலையத்தின் முன்புறமும் ஒதுக்கப்பட்டு ஆட்டோ இயக்க தற்காலிமாக அனுதிக்கப்பட்டது.பேருந்து நிலையத்தின் பின்புறம் நுழையும் இடத்தில் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் சங்கத்தினருக்கும், மூவேந்தர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென நேற்றிரவு(29.08.2025) இரண்டு சங்கங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் மூவேந்தர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வெளியில் இருந்து அடியாட்களை கொண்டு வந்து டாக்டர் கலைஞர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமதானப்படுத்தியும் தொடர்ந்து இருவரும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த
குமார், (அருண் குமார்)
சேக்,ராம் குமார், நான்கு பேரையும் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தியில் அழைத்துச் சென்றனர்.
இவர்களை பார்ப்பதற்கு அப்துல் ரகுமான் என்ற ஆட்டோ ஓட்டுனர் எடமலைப்பட்டி புதூர் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது மூவேந்தர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அடியாட்களுடன் இவரை ஓட ஓட விரட்டி முகத்தில் வெட்டி தாக்கி உள்ளனர். தகவல் அறிந்த டாக்டர் கலைஞர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது இவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இந்நிலையில் இது தொடர்பாக
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
ஒன்று திரண்டனர்.
சக ஆட்டோ ஓட்டுநர்கள் பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என கூறிவந்த நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் , திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வடக்கு சட்டம் ஒழுங்கு ஈஸ்வரன் மற்றும் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர்.
மாநகர காவல் ஆணையர் காமினி லத்தியை எடுத்து சுழற்றி தடியடி நடத்தினார்.
உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களை விரட்டி பிடித்தனர்.
இதனால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் அங்கும் இங்குமாக ஓடி ஆட்டோ ஓட்டுநர்களை பிடிக்க முற்பட்டதால் வாகன ஓட்டிகள் இதை பார்த்து பதட்டம் அடைந்தனர். தற்போது பஞ்சபூப் பேருந்து நிலையம் பின்புறம் எந்த ஆட்டோவும் நிறுத்தி வைக்க காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை அனைத்து ஆட்டோக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments