திருச்சிராப்பள்ளி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் (தன்னாட்சி), இயற்பியல் முதுநிலை & ஆய்வு துறை, காக்னிசன்ஸ் கழகம் மற்றும் டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் கழகம், “மன எழுச்சி நுண்ணறிவு என்பது வலுவான மனித உள்ளாளுமைத் திறன்களின் அடித்தளம்” என்ற சிறப்புப் பயிலரங்கம் 01.09.2025 அன்று மதியம் 2.00 மணியளவில் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது.
இப்பயிலரங்கிற்கு சிறப்பு விருந்தினராக சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி ஆங்கிலத் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் வி. பார்வதி மீனா அவர்கள் வருகை தந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் அ. க. அனிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர்க்கு இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் சீதாலக்ஷ்மி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து டாக்டர் பார்வதி மீனா அவர்கள் மாணவிகளுக்கு மன எழுச்சி நுண்ணறிவின் முக்கியத்துவத்தை விளக்கி, சுய பகுப்பாய்வு செயல்பாடுகள், குழு விவாதம், நாடகம் போன்ற செயல்பாடுகள் மூலம் மனித உள்ளாளுமைத் திறன்களை வளர்க்கும் வழிவகைகளைக் கற்றுத்தந்தார். மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றதால் நிகழ்வு உயிர்ப்புடன், சிந்தனையைத் தூண்டும் வகையில் நடைபெற்றது.
இறுதியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி த. மாலினி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments