திருச்சி மாநகரின் எல்லைகாவல் தெய்வமாக கொட்டப்பட்டு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு பச்சைநாச்சியம்மன், பிறாயடி கருப்பசாமி கோவில் திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்று வருகிற நான்காம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
காவிரி ஆற்றில்இருந்து யானை, குதிரை, ஒட்டகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தகுடம், முளைப்பாரியினை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவந்து வழிபட்டனர்.
இன்று மாலை கணபதி ஹோமம் அதனைத் தொடர்ந்து முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி கும்பாபிஷேக விழாவானது தொடங்குகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments