திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை – கொலை செய்த நபர்கள் கொலையானவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஆலத்துடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33) கூலித் தொழிலாளி.இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஆறு வயதில் அர்ச்சனா என்ற பெண் குழந்தை உள்ளது..
இந்நிலையில் நேற்று சுரேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் தாலுகா முள்ளிப்பாடி கிராமத்தில் வசிக்கும் தனது மாமியார் பாப்பா வீட்டிற்கு
வந்துள்ளனர்.
.மாமியார் வீட்டின் வெளியே நேற்று இரவு சுரேஷ் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் ரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார்.கொலை செய்த கும்பல் பின்னர் சுரேஷின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பினர்.அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சுரேஷின் மனைவி மகள் மற்றும் மாமியார் கண்ணெதிரே நடந்து முடிந்த கொலை சம்பவத்தை பார்த்து குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதியினர் இச்சம்பவம் குறித்து தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து தொட்டியம் மற்றும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தலை இல்லாத உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.தகவல் அறிந்த திருச்சி போலீஸ் எஸ் பி செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும்படி உத்தரவிட்டார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு சேலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சுரேஷிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கவே இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.அது தொடர்பான கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.கொலை செய்த குற்றவாளிகளையும் சுரேஷ் சடலத்தின் தலையையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments