திருச்சியில் கொரானா தொற்றால் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக திருச்சியில் 4 இடங்கள் சிறப்பு கொரானா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நான்கு மையங்களில் பிஷப் ஹீபர் வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரானா சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் சிறப்பாக செயல்பட பின்பற்றப்படும் நெறிமுறைகள் பின்வருமாறு, நோயாளிகள் இருக்கும் இடங்களையும் சுற்றுப்புறத்தையும் எப்போதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்திருக்கின்றனர்.

நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைக்களுக்காகக மருத்துவர்கள் பணிபுரிக்கின்றனர். காலை மற்றும் மாலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தினசரி பரிசோதனைகளை செய்து அவர்களிடம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கேட்டறிகின்றனர். இதற்கிடையில் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் மருத்துவர்கள் உடனடியாகநோயாளிக்கு சிகிச்சை அளித்தும் வருகின்றனர். காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி மூச்சு மற்றும் யோகா பயிற்சி போன்றவற்றை செய்ய நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின்னர் கபசுரக் குடிநீர் கொடுக்கப்படுகிறது. பிறகு உணவை பொருத்த வரைக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள் பின்பற்றப்படுகிறது. காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளையும், மதியம் தென் இந்திய உணவு முறையில் சைவ முறையில் தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் ஒரு முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. அதிக சத்து நிறைந்த காய்கறிகளும், கீரை வகைகளும் இப்பட்டியலில் முக்கியமான ஒன்றாகும்.

இதற்கு இடையில் அவர்களுக்கு சுண்டல் போன்றவை வழங்கப்படுகிறது. மாலை நேரத்திலும் இதே போன்று ஏதேனும் ஒரு பயிர்வகைகள் அவர்களுக்கு உண்பதற்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேர உணவும் இட்லி தோசை போன்ற ஏதேனும் ஒரு உணவு கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 324 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோன்று நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 நோயாளிகள் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 50 நபர்கள் அனுமதிக்கப்படுவது குணமடைந்து வீடு திரும்புவதும் ஆக இருக்கின்றனர். முகாமிற்கு வரும் அனைத்து நோயாளிகளும் நோய் தொற்று அதிக அளவில் பாதிக்கப்படாதவர்களே எனவே அவர்கள் குணம் அடைவதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் என்பது அதிகபட்சம் ஆனதாக தான் இருக்கின்றது.

அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஆகியவைகளை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். சுகாதாரமாகவும், தூய்மையாகும் இந்த வளாகத்தில் இருப்பது போல அவரவர்கள் வீடுகளிலும் அவர்களை பாதுகாத்து இருந்தால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் இங்கு தொற்று பாதிப்பால் வருபவர்களுக்கு கூறும் ஒற்றை ஆலோசனையாக இது மட்டுமே பின்பற்றப்படுகிறது என்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK







Comments