அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக கவுன்சிலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் 6வது வார்டு திருவளர்ச்சோலை பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி மற்றும் இடுகாட்டிற்கு செல்லும் வசதி, பெண்களுக்கான பொது கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துதரப்படாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பெண்களுக்கு என பொது கழிப்பிடம் மற்றும் புது குளியலறை இல்லாததால் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது என்றும் இது தொடர்பாக திமுக கவுன்சிலர் கலைமணியிடம் பலமுறை மனு அளித்தும் கண்டு கொள்வதில்லை அதே போன்று மாநகராட்சி மேரிடம் கடந்த மாதம் புகார் அளித்தும் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விளம்பர திமுக ஆட்சியின் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், மக்களின் குறைகளுக்கு செவிமடுக்காத திமுக கவுன்சிலர் கலைமணியையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலைமுதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தாலும், தற்போதுவரை அதிகாரிகள் தங்களது போராட்டத்தை கண்டுகொள்வதாக இல்லை தங்களது பகுதிக்கு வந்து ஆய்வு செய்யவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்த மக்கள், தங்களது கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் மாவட்ட நிர்வாககுழுகூடி, அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் எனவும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments