திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு பகுதியில் வணிகர்கள் தங்களது கடைகளின் முன்னால் தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்து கடைகளை கட்டி உள்ளனர். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினர் நேற்று மூன்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக அளவைக் கொண்டு அளக்க வேண்டும் எனவும் அளந்து ஆக்கிரமிப்பு எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வளநாடு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்றையும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
அப்பொழுது பொதுமக்கள் கோவிலை அகற்றக்கூடாது என நெடுஞ்சாலை துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் காவியா பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணிக்காக மணப்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார்,உதவி பொறியாளர் துரைராஜ்,சாலை ஆய்வாளர் பாலசிவராமன்,மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments