திருச்சி, கேகே நகர் அருகேயுள்ள, இந்திராநகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கோவில், திருச்சிமாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இத்தகைய பெருமைபெற்ற இத்திருக்கோயில் ஜீர்னோதாரண மஹாசம்ரோக்ஷணம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழாவானது தொடங்கியது.
ஒன்பதாம்தேதி ரக்க்ஷாபந்தனமும்,
வேதபாராயணமும் நடைபெற்று, இன்று ஐந்தாம்கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்று, மங்கள இசையுடன் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, பட்டாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பிறகு திருக்கோயில் ராஜகோபுரம், ஸ்ரீநிவாஸ பெருமாள் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தேறியது.
அப்போது அங்கு திரண்டிருந்த பெருந்திரளானபக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என்ற பக்திமுழக்கத்துடன்
கும்பாபிஷேகத்தை கண்டு வழிபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments