Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் திமுக செயல்படுகிறது – திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பேட்டி

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர். அப்போது வழிக் காவலுக்கு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டது.

தொடர்ந்து சவுக்கு சங்கரை ஆஜர் படுத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக கூறி உதவி ஆய்வாளர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த வழக்கு இன்று திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது தொடர்ந்து சவுக்கு சங்கர் விசாரணைக்கு நீதிபதி பரம்வீர் முன்பு ஆச்சரியப்படுத்தப்பட்டார்.

நேரில் விசாரணை மேற்கொண்ட பின்னர் 12.11.2025 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியளர்களுக்கு
சவுக்கு சங்கர் ஏற்கனவே எனது புகைப்படம் காவலுடன் அமர்ந்திருப்பது போல வெளியிட்டனர். மேலும் பெண் காவலர்கள் உடைத்த கையிலேயே என்னை தாக்கினார்கள். இதனை நீதிபதியிடம் முறையிட்ட பிறகு அனைவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

எனது கை உடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் நான் அப்போது என்ன மன நிலையில் இருப்பேன் அவ்வாறு நான் எப்படி பேசுவேன்.

இந்நிலையில் என் மீது அவதூறு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை பெற்றுக் கொள்வதற்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினேன்.

என் மீது தற்போது 35 வழக்குகள் நிலவில் உள்ளன. 20 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி உள்ளதால் என் மீட்டியா நிறுவனத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்னால் திமுகவின் நிலை அம்பள படுத்தபடுகின்றது என்ற பயத்தில் இது போன்ற செய்கின்றனர்

மேலும் திருச்சியில் நடைபெற உள்ள தவெக பிரச்சார அனுமதி தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அவர் அரசியல் கட்சித் தலைவர் அவர் பிரச்சாரம் செய்துவிட்டு போகட்டும் ஆனால் காவல்துறையை வைத்துக்கொண்டு எப்படி முடக்கிறார்களோ அதேபோல் என்னையும் காவல்துறை வைத்து முடக்குகின்றனர்.

இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை காவல் துறையில் வைத்து ஒடுக்குகிறார்கள். அதிமுக பிரச்சாரத்தின் போது அவசர ஊர்தியை அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட பிறகு பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஜய் மாநாடு நடத்தும்போது பவுன்சர் ஒருவர் ஒரு நபரை தூக்கிப் போட்டதால் விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் அத்தனை பேரையும் முடக்குகின்ற செல்லில் அரசு செயல்படுகிறது.

காவல்துறை திமுகவின் கூலிப்படையாக செயல்படுகிறது. பல்வேறு இடங்களில் காவல்துறையை தாக்குவது போல வைரல் காட்சிகள் வருகின்றது என்ற கேள்விக்கு

இதில் காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது.

இந்த நிலை போன்று ஒரு சில ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இருக்கலாம் ஆனால் அவர்களை கூட்டிச்சென்று கை, காலை உடைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது, மாவு கட்டு போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது இது மனித உரிமை மீறலாகும்.

துறையூரில் அதிமுக கூட்டத்தில் அவசர ஊர்தி வந்த சம்பவம் அங்கிருந்த நபர் அழைத்திருக்கலாம் என்ற கேள்விக்கு. அது திமுககாரர் கூட இருக்கலாம் என பதில் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *