திருச்சி மாவட்டம், முசிறி அருகே வடுகப்பட்டி பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது,
இக்கல்லூரியில் முசிறி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆண், பெண் என இருபாலரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்தக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக நாகராஜ் பணிபுரிந்து வருகிறார்,
இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் தொலைபேசியில் கூறி தனிமையாக இருக்கலாம் என பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது,
அதாவது அந்த மாணவிக்கு உதவி செய்வது போன்று முதலில் உதவி செய்துள்ளார், பின்னர் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி நாம் தனிமையில் இருக்கலாம் என கேட்டுள்ளார், மேலும் நானும் எனது மனைவியும் பேரளவில் தான் பேசிக் கொள்வோம் இதுவரை உல்லாசமாக இருந்ததில்லை என்றும் நீ என்னுடன் தனிமையில் இருப்பியா என பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது,
இது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
குறிப்பாக முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நாகராஜ் என்பவர் இதற்கு முன்பாக இதே போன்று கல்லூரியில் உள்ள மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காக குற்றச்சாட்டும் உள்ளது, யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசிய விவகாரத்தில் கல்லூரி நிர்வாகமே பல்வேறு விசாரணைகள் செய்து தமிழ் பேராசிரியர் நாகராஜனிடமும் விசாரித்ததாக கூறுகின்றனர்,
திருச்சி மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் பரிந்துரையின் பெயரில் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக புகார் குழு தலைமை ஹேமா மற்றும் பேராசிரியர்கள் வழக்கறிஞர் 1 காவல் துறையினர் 1 கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது,
அனைத்து விசாரணைகளுக்கும் பிறகு துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்லூரி முதல்வர் கூறினார்,
இதுவரை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் எந்த வித புககாரம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,
ஆனால் மாணவிகளிடம் ஆசை வார்த்தையில் கூறி அவர்கள் படிக்கும் மனதை மாற்றி இதுபோன்று செயலில் ஈடுபடும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments