திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் அமைந்துள்ள பூவாளூர் 110/33-11 கி. வோ துணை மின் நிலையத்தில், வரும் செப்டம்பர் 16, 2025 அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் இருக்காத பகுதிகள்:
இலால்குடி நகர் பகுதிகள்: இலால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர்.
கிராமப்புறப் பகுதிகள்: தென்கால், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொள்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகர், காட்டூர், இராமநாதபுரம்,
கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளலூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம்.
பராமரிப்புப் பணிகள் முடிந்ததும், மாலை 4 மணிக்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சிரமத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments