அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சி அண்ணாசிலை பகுதியில் இன்று காலை அமைச்சர் மகேஷ் என்பி அருண் திமுக சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதை எல்லாம் கண்டு கொஞ்சம் கூட பயப்படாமல் மிகவும் கேஸ்வலாக அண்ணா சிலை எதிரில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது தெரியவந்தது.
அண்ணாவின் சிலைக்கு எதிரே சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் என்பது காலை முதலே மதுபான கூடத்தில் வைத்து எவ்வித அச்சமும் இன்றி மதுபானங்களை சிற்றுண்டிகளுடன் விற்பனை செய்து வந்தனர்.
ஏராளமான பத்திரிகையாளர்கள் அப்பகுதியில் இருந்த பொழுது மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் வேறு வழியின்றி காவல்துறையினர் உள்ளே சென்று அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். எப்போதும் 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னதாக மதுபானங்களை விற்பனை இங்கு நடைபெற்று வருவதற்க்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க நீண்ட நாளாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கியமாக அமைச்சர்,எம்.பி வந்து சென்ற பகுதியில் பட்டப் பகலில் காலையில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது.மதுபான கூடத்திற்க்குள் புகுந்து அங்கு இருந்த மதுபான பாட்டில்களை போலீசார் அள்ளி சென்றனர். காட்சிகளை படமெடுத்த பத்திரிகையாளர்களிடம் சொன்னீர்கள் நடவடிக்கை எடுத்தோம் பின்னர் ஏன் உள்ளே வீடியோ எடுக்கிறீர்கள் என்று புலம்பியும் கடிந்தும் கொண்டனர்.
அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments