Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் சிலை முன் மது விற்பனை – பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்

திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை முதல் திமுக , அதிமுக,  தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் அண்ணாசிலை எதிரில் உள்ள டாஸ்மார்க் மதுபான பாரில் காலை முதலே மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது. அண்ணா பிறந்தநாள் விழா செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள் இதை கவனித்து டாஸ்மார்க் மதுபான பார் உள்ளே சென்று அங்கு மது அருந்திக் கொண்டிருந்த குடிமகன்கள் மற்றும் மது விற்பனை நடைபெறுவதை படம் பிடித்தனர்.  இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட கோட்டை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து மதுபான பாரில்  இருந்த 18 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் இடம் செய்தியாளர்கள் மது விற்பனை குறித்து கேட்டபோது. இது ஒரு தவறான முன்னுதாரணம்,  அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது சிலை  அருகிலேயே மது விற்பனை நடந்தால் இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  இது தவறான முன் உதாரணம். இப்பொழுது காலை 10:15 மணி தான் ஆகிறது அதற்குள் யார் இவர்களுக்கு டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. இதை அரசும் காவல் துறையினரும் நிச்சயம் கண்டித்து அது போன்ற நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற விஷயங்கள் தொடராது. இது கண்டிக்கத்தக்க விஷயம் , அண்ணா சிலைக்கு எதிரே இது போன்ற நிகழ்வு நடைபெறும் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் கிடையாது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *