திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ பேசுகையில்.
மகாத்மா காந்தியின் நடைபயண அரசியலை முன்னெடுத்தவர், தனது ஆயுள் காலதில் 5ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர் வைகோ.
பட்டம் பதவியை அனுபவிப்பதற்காகவும், பணம் பொருள் ஈட்டுவதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.
கூட்டாட்சி , பெண் சமந்துவம், இருமொழி கொள்கை, சமூக நீதி உள்ளிட்ட கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவந்து, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு வெளிச்சம் பாச்சியவர் அறிஞர் அண்ணா.
மதிமுக தொடங்கப்பட்டது முதல் அண்ணாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடும் இயக்கம் மதிமுக.
ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு இந்தி மற்றும் சமஸ்கிரதம் மொழிகளை உலக தொடர்பு மொழியாக பயன்படுத்த முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என பேசிவருகிறார்.
தமிழ்நாட்டின் கல்வி, பேரிடர் நிவாரணம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்ளிட்டவற்றுக்கான நிதியை தமிழகத்திற்கு கொடுக்க ஒன்றிய பாஜக மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக அரசு சிதைக்க பார்க்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி 30நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால், குற்றம் நிருபிக்கப்படும் முன்பே அவரது பதவியை பறிக்கும் வகையில் சட்டதிருத்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும், லட்சகணக்கான ரூபாய்களை அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! நானும், மதிமுகவும் வீழமாட்டோம். பைத்தியக்கார பயல்களா எங்களை யாரும் வீழ்த்த முடியாது. அண்ணா வழியில் பயணிப்போம் என பேசினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments