திருச்சி, செப்டம்பர் 16 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (17.09.2025) திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட “நோ-ஃப்லை மண்டலம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. ந. காமினி, ஐ.பி.எஸ். அவர்கள் வெளியிட்ட உத்தரவில், 2021ஆம் ஆண்டின் ட்ரோன் விதிகளின் பிரிவு 24(2) ன் கீழ், செப்டம்பர் 17 காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திருச்சி மாநகரில் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட முக்கிய இடங்கள்:
கேண்டோன்மென்ட் – TVS டோல்கேட், சர்க்யூட் ஹவுஸ், செங்குளம் காலனி, மன்னார்புரம், அரிஸ்டோ ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, சோனா தியேட்டர்
எடமலைப்பட்டி புதூர் – பனஜப்பூர், க்ராஃபோர்ட், மன்னார்புரம், கிணி நகர்.
திருச்சி விமானநிலையம் – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, கம்பியில்லா சாலை, மொரைஸ் நகரம், திருவானைக்கோயில்.
கே.கே.நகர் – சுப்பரமணியபுரம், மத்திய சிறைச்சாலை, எல்ஐசி காலனி, பெரியார் ஆர்ச்.
கோல்டன்ராக், அரியமங்கலம், காந்தி மார்க்கெட், தில்லைநகர், வாரியூர், கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகள்.
ட்ரோன் அல்லது UAV / RPAS பயன்படுத்துவோர் இத்தடை உத்தரவை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments