தமிழக முழுவதும் தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் திராவிட கழக நகர செயலாளர் சிவானந்தன் எனபவர் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் நகர் பகுதியில் டீக்கடை வைத்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது கடையில் டீ குடிக்க வரும் அனைவருக்கும் காலை 4 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை டீ கட்டணம் இரண்டு மட்டுமே பெற்றுக் கொண்டு டீ வழங்குகிறார்.
பால் சர்க்கரை உள்ளிட்டமூலப் பொருட்களை விலை உயர்ந்துள்ள காலகட்டத்தில் சிவானந்தன் தந்தை பெரியார் மீது கொண்ட ஈடுபாட்டால் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் இரண்டு ரூபாய்க்கு டீ வழங்குகிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments