பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.
சென்னையிலிருந்து விமானத்தில் கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்காக வந்த முதலமைச்சர், திருச்சி விமான நிலையத்திலிருந்து ரோடு ஷோவாக புறப்பட்டார். வழியெங்கும் தொண்டர்களை கையசைத்து வாழ்த்திய அவர், மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் மேஜர் சரவணன் ரவுண்டானா, மாவட்ட ஆட்சியர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதலமைச்சர், அங்கு மேடையில் நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள், எம்.பிக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதனை ஓதினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எம்.பி.க்கள் கனிமொழி, சிவா, ஆ.ராசா, அருண் நேரு, துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கமாக நடைபெறும் சமூக நீதி நாள் உறுதி நிகழ்வு, முதன்முறையாக தலைநகருக்கு வெளியே திருச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAghttps://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments