திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு முசிறி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள். எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், வருவாய் வட்டாட்சியர்
அலுவலகத்தில் 20.09.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முசிறி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் முசிறி வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments