திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் ஆரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவி அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் திருச்சி கே கே நகர் அமலாபுரம் காலணியை சேர்ந்த தமிழ் (52) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அந்த மாணவி சக மாணவர்களுடன் கல்லூரி லேபிள் இருந்ததாகவும் லேபில் ஆய்வு முடித்துவிட்டு வெளியில் சென்றபோது பேராசிரியர் தமிழ் அந்த மாணவியை கைகாட்டி கூப்பிட்ட தாகவும் அதற்கு மாணவி அருகில் சென்ற போது தமிழ்அந்த மாணவி தனது அறைக்குள் அழைத்ததாகவும் அதன் அடிப்படையில் உள்ளே சென்ற அந்த மாணவியிடம் தமிழ் உன்னிடம் செல்போன் கூட இல்லையா நான் செல்போன் வாங்கி தருகிறேன் என கூறியதோடு உன் உள்ளாடை அளவு என்ன என கேட்டு அந்த மாணவியை திடீரென தமிழ் கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததாகவும் அதற்கு அந்த மாணவி அவரை உதறி தள்ளியதாகவும் இந்த நிலையில் மீண்டும் தமிழ் அந்த மாணவியை கட்டிப்பிடித்ததாகவும் அப்பொழுது அந்த மாணவி தமிழை தள்ளிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்து சக மாணவிகளிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது சம்பந்தமாக கல்லூரியில் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியர் ஆகியோரிடம் தெரிவித்ததாகவும் .
இது குறித்து அவர்கள் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியம் காட்டியதாகவும் அதன் அடிப்படையில் அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் இச்சம்பவம் பற்றி கூறியதாகவும் அதன் அடிப்படையில் அவர்கள் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் இந்த வழக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் வருவதால் அவர்கள் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தமிழை கைது செய்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவி இந்த பிரச்சனை சம்பந்தமாக கல்லூரி துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியர் இடம் கூறி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் போலீசார் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments