திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் கிராமத்தில் இன்று தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்க, திருச்சி மாவட்ட தமிழக விவசாய சங்கத் தலைவர் ம.ப. சின்னதுரை கருப்புக்கொடி மற்றும் சங்கக் கொடியுடன் வர முயன்றார்.
ஆனால், காவல்துறையினர் அவரை முகாமுக்குள் செல்லத் தடை செய்ததோடு, கருப்புக்கொடி மற்றும் சங்கக் கொடியைப் பறிமுதல் செய்ய முயன்றதால் சின்னதுரைக்கும் காவல்துறையினருக்கும் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து சின்னதுரை அங்கேயே தண்ணீர் அருந்தா உண்ணா நிலை இருந்து வெயிலில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மனு கொடுக்க கருப்பு கொடியுடன் வந்த விவசாய சங்க தலைவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது .
இந்த நிலையில் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் இரண்டு மணி நேரமாக தொடர்ந்து அப்பகுதியில் விவசாய சங்க தலைவர் சின்னத்துரை போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அப்போதும் காவல்துறையினர் ஸ்டாலின் முகாமிற்கு அனுமதிக்காமல் அவர் மேல் வெயில் படாமல் இருக்க கயிற்று கட்டிலை எடுத்து வந்து துணியை கொண்டு மூடி மறைத்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத் தலைவர் மயக்கத்துடன் படுத்திருந்தார்.
நேற்று திருச்சி வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க இருந்த நிலையில், இவரையும்,
அதேபோல விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகிய இருவரையும் காவல்துறையினர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டு காவலில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments