மின்சார கம்பங்கள் இருக்கு தெருக்களில் தெரு விளக்கு இல்லை. மழைநீர் வடிகால் வசதியில்லை. பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளனர்
ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் அம்பேத்கார் நகர் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மின்சார கம்பங்களில் இருந்தும் தெருக்களில் தெரு விளக்கு இல்லாமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னால் இங்கு உள்ள பாசன வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறையால் தூர்வாரப்பட்டன. ஆனால் முழுவதும் தூர்வாரப்படாமல் கரைகள் போடப்படாததால் வாய்க்காலில் நீர் அதிகமாக வரும் பொழுதும் மழை பெய்யும் பொழுதும் வாய்க்கால்களில் வரும் நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் கிராம வரைபடத்தின் படி வாய்க்காலை முழுவதும் தூர்வாரி கரைகள் அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இங்கு 20 -2021ம். ஆண்டு ரூபாய் மூன்று லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் ரோடு போடப்பட்டது. ஆனால் அந்த ரோடு சரிவர போடாததால் குண்டும் குழியுமாக பள்ளம் ஆகிவிட்டது.நான்கு புறமும் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஆகவே அந்த ரோடையும் சரி செய்து தர வேண்டும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அம்பேத்கர் நகரில் வாழும் மக்கள் திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கின்றனர்.
கடந்த பல வருடமாக மக்கள் திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகத்தில் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்பொழுது முதலமைச்சருக்கு முதல்வரின் முகவரி மூலம் மனு கொடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments