திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உப்பிலியாபுரம் பகுதியில் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கல்வி அதிகாரிகள் இருவரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் பள்ளிகளில் நடத்துவதற்கு அதற்கான பட்டியல்களை தயாரித்து அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் முக்கியமாக கிராமப்புறங்களில் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் ஏற்கனவே அறைகள் குறைவாக இருக்கும் அப்படி இருக்கும் பொழுது திட்டத்தை பள்ளிகளில் நடத்தி மாணவர்களின் தேர்வு காலங்களில் தொந்தரவும், வகுப்பறை எடுக்காமல் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் தா.பேட்டை அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று உள்ளது. அதேபோல் திருச்சி மாநகரில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள இ.ஆர் அரசு உதவி பெறும் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட இந்த நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதற்காக ஒரு சில அறைகளை ஒதுக்கி அமர வைத்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட்டு அறிவுறுத்திருந்தார். அதையும் பொறுப்பெடுத்தாமல் கல்வி அதிகாரிகள் தற்பொழுது தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் முதல்வரின் முகாம்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கண்டு நடவடிக்கை எடுப்பாரா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். முக்கியமாக இரண்டு கல்வி அதிகாரிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தற்பொழுது அவர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் சாலையின் திட்ட முகாம் நடைபெற்று உள்ளது கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது யார் நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒருபுறம் தேர்வு நடத்தப்படுவதும் மறுபுறம் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக அரசின் முகாம் நடத்தப்படுவதும் பெரும் சிரமத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. தேர்வில் கவனம் செலுத்த முடியாமலும் வரும் பொதுமக்களின் கூச்சல்கள் அதிக அளவில் கேட்பதும் பள்ளிகளில் அரங்கேறி வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments