தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படையில் கடந்த 1988,93,97,99 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்து பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், தலைமை காவலர்கள் ஆகியோருக்கு பணி மூப்பு மற்றும் விதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மேலும்,பணி மூப்பு இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேலுமணியம்மாள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தீர்ப்பின்படி 500க்கும் மேற்பட்டோருக்கு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும்.
பதவி உயர்வு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யாமல், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்ட இருநீதிபதிகள் அமர்வில், தமிழ்நாடு காவல்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் அதில் விதியின் அடிப்படையில் பதவி உயர்வு கேட்பவர்களின் வழக்கையும், விதியை மீறி பதவி உயர்வு கேட்பவர்களின் வழக்கையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.
வழக்குகளை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்காமல், கால நீட்டிப்பு செய்வதால், சிலர் பதவி உயர்வு கிடைக்காமல் பணி ஓய்வு பெற்று விட்டனர். சிலர் பதவி உயர்வு கிடைக்காமல் மரணம் அடைந்து விட்டனர்.
எஞ்சி இருப்பவர்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, குடுப்பத்தினருடன் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்துள்ளனர்.
அதில், இடம், நாள், நேரம் விரைவில் அறிவக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விதியை மீறி பதவி உயர்வு வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments