திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளது வேறு ஏதாவது கேளுங்கள் என்றார்.
திருச்சியில் ரயில்வே பாலம் பணிகள் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கவில்லை அவர்களை விரைந்து முடிக்குமாறு கூறியுள்ளேன், பால் பண்ணை சாலை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிக்காக நான் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசி உள்ளேன். மாவட்ட நிர்வாகமும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. திருச்சியில் ரயில்வே இடங்களில் நடைபெற உள்ள சுரங்கப்பாதை பணிகளுக்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. அதற்கான கோப்புகளை நான் தொடர்ந்து கண்காணித்து அதற்குன்டான அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறேன்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவைகள் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை துவக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இண்டிகோ விமானம் மூலம் கூடுதல் சேவைகள் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஏர்போர்ட் ஓடுதள விரிவாக்கம் 99% நிறைவடைந்து விட்டன சில பணிகளை விரைந்து முடிக்க விமான நிலைய மேலாளரிடம் பேசி உள்ளேன் மாவட்ட ஆட்சியரிடமும் பேசியுள்ளேன் பணிகளை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளேன்.
முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது முதலீடு ஈர்க்க அல்ல முதலீடு செய்ய என விஜய் குறிப்பிட்டுள்ளாரே என கேட்டபோது. சகோதரர் விஜயை பொறுத்தவரை அவர் எதிர்க்கட்சியாக செயல்பட நினைக்கிறார் அவர் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது படித்தவர் அவர் பின் இளைஞர் பட்டாளம் உள்ளது. பொத்தாம் பொதுவாக அவர் அனைவரையும் குற்றச்சாட்டு கூறுவது அவரது நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. அவர் கூறும் சில கருத்துகளில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. குறிப்பாக முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் கூறுவது ஏற்புடையது அல்ல. எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்யப் போகிறார்கள் எங்கு அந்த முதலீடு செய்யப் போகிறார்கள் என்ற தரவுகளுடன் தான் முதல்வர் பதில் கூறியுள்ளார். 15000 கோடிக்கு மேல் முதலீடுகள் வருவதற்கு உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அது எந்தெந்த தொழிலில் நிறுவனங்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார் இருந்தும் விஜய் இப்படி பேசுவது அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.
விஜய் கூறும் சில கருத்துக்களை ஏற்கிறேன் எனக் கூறினீர்களே அதில் உங்களுக்கு ஏற்புடையது எது என கேட்ட போது. ஒன்றிய அரசுடைய மாற்றான் தாய் மனப்பாண்மை குறித்து அவர் பல கருத்துக்களை கூறியுள்ளார் அது எனக்கு ஏற்புடையது என்றார்.
திமுக பாஜக இரண்டு அரசாங்கத்தையும் விமர்சனம் செய்கிறார். ஒரு இயக்கத்தின் தலைவராக அவர் விமர்சிப்பதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு. ஆனால் எதை சொல்ல வேண்டும், குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டுவதில் தவறு கிடையாது பொத்தாம் பொதுவாக அனைத்தையும் சொல்லக்கூடாது. இது அவரின் நம்பகத்தன்மை குறையும். சகோதரர் விஜயின் நம்பகத்தன்மை தான் குறையும் இவர் அனைத்தையும் இப்படித்தான் கூறுகிறார் என்ற தவறான மனப்பான்மை பொதுமக்களிடம் ஏற்படும் என்றார்.
மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்துள்ளார் அவர் இந்தியா கூட்டணிக்கு வந்தால் வரவேற்பீர்களா எனக் கேட்டபோது. நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனைகள் விசேஷங்கள் இருக்கிறது அதைப் பற்றி கேளுங்கள் என்றார்.
அதிமுக பாஜக கூட்டணிய பொறுத்த வரை அவர்கள் திடீரென கூட்டணி சேருகிறார்கள், திடீரென அந்த கூட்டணியில் பலர் வெளியே செல்கிறார்கள், இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும், அதே நேரத்தில் முழு மனதுடன் அதிமுக தோழர்களின் ஒப்புதலுடன் இந்த கூட்டணி அமைந்துள்ளதா என கேட்டால் அது கண்டிப்பாக கிடையாது. அந்த கூட்டணி இன்று இருக்கிறதா நாளை இருக்கிறதா நாளை மறுநாள் இருக்கிறதா? என்கின்ற சந்தேகம்தான் எனக்கு இருக்கிறது என்று கூறினார் துறை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments