திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள அணலையில் தனி நபர் ஒருவர் தனது பட்டா நிலத்தில் வாய்க்கால் செல்வதாக கூறி 50 -100 ஆண்டுகளாக சென்று வந்த பாசன வாய்க்காலை மூடிவிட்டார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் விவசாயம் செய்வதற்கு நீர் வழங்க கோரி தற்பொழுது முதல்வருக்கும் மனு அளித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் குறி தீர்க்கும் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேசினர். ஆனால் களப்பணி செய்த ஆற்று பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பட்டா நிலத்தில் வாய்க்கால் செல்வதால் ஒன்றும் செய்ய முடியாது என்று குறி கைவிரித்து விட்டார்கள்.
படிக்காத மேதை காமராஜர் 66 ஆண்டுகளுக்கு முன்னாலே விவசாயம் அழிந்துவிடும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் இதற்கு தீர்வு கண்டு விட்டு சென்றுள்ளார்
விவசாயம் செய்ய விரும்பும் அனைவருக்கும் தண்ணி கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்று சட்டம் இயற்றினார் காமராஜர். தமிழ்நாடு சட்டம் 25 /1959 – “மெட்ராஸ் இரிகேஷன் ஒர்க்ஸ் (பீல்ட் போடீஸ் கட்டுமானம்) மசோதா, 1959”
அரசாங்க நிலமோ, தனி மனித நிலமோ, பட்டா நிலமோ, யார் நிலமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு பாசன நீர் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது இந்த சட்டம். இதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத் துறைக்கு உள்ளது.
விவசாயம் செய்யும் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பது நீர்வளத்துறையின் கடமை, இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட முடியும் என்கிறது படிக்காத மேதை காமராஜர் இயற்றிய சட்டம்.
எந்தவொரு நபரும், எந்தவொரு வயலிலும் நீர் ஓட்டத்தைத் தடுக்கும் அல்லது குறுக்கிடும் அல்லது தடுக்க அல்லது குறுக்கிடக்கூடிய எதையும் செய்யக்கூடாது, விதிகளை மீறினால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயம் செய்ய விரும்பும் அனைவருக்கும் அரசாங்கம் தண்ணீர் கொடுக்கும், அதன் மூலம் விவசாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். அது அரசாங்கத்தின் நிலமாக இருந்தாலும் சரி, தனி ஒரு மனிதனின் நிலமாக இருந்தாலும் சரி, தண்ணீர் கொடுக்க வேண்டு. ம் தண்ணீர் கொடுப்பதற்கு வாய்க்கால் வெட்டுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இருக்கிறது, அந்த தனி நபருக்கும் உரிமை இருக்கிறது என்று சொல்கிறது சட்டம்.
அரசாங்கம் வயல்களைக் கட்டவோ அல்லது தோண்டவோ முடியும். அரசாங்கம் தங்களுக்குச் சொந்தமான அல்லது எந்தவொரு நிலத்திலும், பாசன நோக்கத்திற்காக தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக வயல்வெளிகளைக் கட்டுவது அல்லது தோண்டுவது சட்டப்பூர்வமானது.
அத்தகைய கட்டுமானம் அல்லது தோண்டுதல் எந்தவொரு நபரும் தனது நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ எந்தவொரு நீர்வழியிலிருந்தும் தண்ணீர் எடுக்கும் உரிமையில் தலையிடக்கூடும்.
தமிழ்நாடு சட்டம் 25/1959, சட்டத்தை நடைமுறைப்படுத்த அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட எந்த விதியின்படியும் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்ய எண்ணிய எந்தவொரு அரசாங்க அதிகாரி அல்லது ஊழியர் மீதும் வழக்கு, வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது , எடுக்க முடியாது என்ற பாதுகாப்பையும் அரசாங்க ஊழியருக்கு அளித்துள்ளது இந்த சட்டம்.
தமிழக முதல்வர் இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பித்து தரிசாகும் விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும், பல ஆண்டுகளாக சென்று வந்த பாசன வாய்க்காலை மூடிய தனி நபர் மீது தமிழ்நாடு சட்டம் 25/1959 படி நடவடிக்கை எடுத்து ஒரு முன் உதாரணமாக்கி அனைவரும் இந்த சட்டத்தை அறிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments