Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சிறுகமணி வேளாண்மை நிலையத்தில் நாளை ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற 22.09.2025 திங்கட்கிழமை அன்று ஆடு, மாடு, கோழி வளர்ப்பதற்கான நிலையபயிற்சி நடைபெற உள்ளது. ஆடு வளர்ப்பு பயிற்சியில் வெள்ளாடு, செம்மறி ஆடு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய் தடுப்பு முறைகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்படும். நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுகோழி இனங்கள், தீவன மேலாண்மை, நாட்டுக்கோழி வளர்ப்பு, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக் கூண்டில் வளர்த்தல், நோய் மேலாண்மை, முறையான பராமரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்படும். கறவை மாடு வளர்ப்பு பயிற்சியில் தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை கருத்தரித்தல், கன்று பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவனப் பொருட்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு 04312962854, 9942449786, 8838126730, 9171717832  என்ற எண்களை அலுவலக நேரத்தில் (காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை) தொடர்பு கொள்ளவும்.மேற்கண்ட தகவலை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு ( 9171717832 ( அவர்கள் தெரிவிக்கின்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *