ஊர் பொதுக்கோவிலை தனிநபர்கள் ஆக்கிரமிப்புசெய்து பொதுமக்களை மிரட்டுவதை கண்டித்து ஆலய கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள 45 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு அங்காளஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில் தலையிடக்கூடாது என பொதுமக்களை மிரட்டுவதாகவும்,

பொதுமக்களிடமிருந்து வசூல்செய்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட மண்டபத்தில் சுபநிகழ்வுகள் நடத்த அனுமதி மறுப்பதுடன், கோவில் பிரசாதம் வழங்குவதற்கும், உண்பதற்கும் மறுக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாகவும், பொதுமக்கள் முன்னிலையில் புதிதாக கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி ஆலய பாதுகாப்பு கமிட்டி மற்றும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர் பொதுக்கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமிப்புசெய்து உரிமை கொண்டாட தடைவிதிக்கவும், 43 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த முறையினை மாற்றாமல், தன்னிச்சையாக செயல்படும் கோவில் நிர்வாகத்தை மாற்றியமைத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார்மனு அளித்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
ஊர் பொதுக்கோவிலில் ஆக்கிரமிப்பு – ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்



Comments