உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி ஹாட்சிட்டி மருத்துவமனையை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிக முக்கியமாக மனிதனின் முக்கிய உறுப்பான இருதயத்தை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் காவேரி ஹாட்சிட்டி மருத்துவமனையின் மூத்த இருதய நிபுணர் அரவிந்த் குமார் பேசிய பொழுது…

மக்கள் இன்று தங்களுடைய வாழ்வில் அதிக அளவில் தங்களின் தேவைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு அலுவலகம், தொழில் உள்ளிட்ட இடங்களி பணிபுரியும் பொழுது டென்ஷனாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கும் அப்போது தான் அந்த பழக்கம் வரும். தற்பொழுது மொபைல் ஃபோன் கையில் இல்லாத குழந்தைகளை பார்க்க முடியாது.

தங்களது உடலை பேணிகாக்க உடலில் எடை அவர்களின் உயரத்திற்கு ஏற்றார் போல் பராமரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
குறித்த நேரத்தில் உணவு உட்கொண்டு ஆறு மணி நேரத்திற்கு மேல் நன்றாக உறங்குவது அனைவரிடமும் மகிழ்ச்சியாக பழகுவது இவைகள் இருதயத்திற்கு மிகவும் இதமானதாக இருக்கும். உங்கள் உடலிலும் எந்த நோயும் வராது.

மற்றவர்களை பற்றி கவலை மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் இருந்து இயந்திர வாழ்க்கை தவிர்த்து உடலை பேணி காத்தால் இருதயத்திற்க்கு பாதிப்பு வராது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியை திருச்சி காவேரி ஹாட்சிட்டி மருத்துவமனையின் மூத்த பொதுமேலாளர் ஆண்ட்ரூஸ் நித்தியதாஸ் உள்ளிட்ட ஊழியர்கள்
ஏற்பாடு செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments