பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
திராவிட மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 2 வார்டு எண் 34 உட்டப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது.
அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்பட்ட நான்கு நபர்களுக்கும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது, வட்டக் கழகச் செயலாளர்கள் சில்வியா,
கருணாநிதி அரியமங்கலம் கோட்டம் உதவி ஆணையர்
திருமதி. ஜெயந்தி, தாசில்தார் விக்னேஷ், உதவி செயற்பொறியாளர் திரு.இப்ராஹிம், இலைநிலை பொறியாளர் திரு.ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கௌசல்யா, மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடம்,
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments