திருச்சி காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல்மேட்டில் வளர்ந்துள்ள நாணல் புற்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளதால் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீன்பிடித்து ஆற்றின் நடுவே சமைத்து உண்பதும், மதுபானங்கள் அருந்துவதும் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக புகார் எழுந்து வந்தது.
மேலும் முதலைகள் இந்த நாணலுக்குள் வந்து கரையோரமாக படுப்பதும் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வருவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் இளைஞர்கள் யாரேனும் இவைகளுக்கு தீவைத்துள்ளனரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments