திருச்சி (கேர்) தனியார் கல்லூரியில் நர்சிங் கல்லூரி முதலாமாண்டு தொடக்க விழா
நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை
கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் நேரு..
அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட மரியாதைக்குரியதாக விளங்கி வருகிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து பெரிய மனிதராக மயில்சாமி அண்ணாதுரை இருக்கிறார்.
நாங்க எல்லாம் ஒரு சாதாரண விவசாயிகள் குடும்பம் நிகழ்ச்சிகளை கூட முறையாக நடத்த பழகவில்லை.அப்போது எல்லாரும் கல்லூரி ஆரம்பிக்கிறார்கள்.எனக்கு அகிலன் என்ற ஐஏஎஸ் நண்பர் இருந்தார். 5 கோடி இருந்தால் ஆரம்பித்து விடலாம் என்றார். இந்த கல்லூரியை நிறுவியவர் தம்பி ராமஜெயம் அவர் இன்று இல்லை. 1977 ஆம் ஆண்டு பள்ளி கல்வி முடித்தவுடன் கல்லூரி படிப்பை தொடர இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்றார்.1977ல் அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து விட்டார்.
நாங்கள் திமுக என்ற உடனே எங்கும் படிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிமுகவில் ஒருவர் எஸ்டிஎஸ்யிடம் சொல்லி சீட்டு வாங்கி தரேன்னு சொன்னார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு போனோம். சென்னை எக்மோரில் இருந்து சிதம்பரத்திற்க்கு ரயிலில் தொங்கிக்கொண்டே சென்றோம். அங்க போய் பார்த்தபோது இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது ஒரு நினைப்பு வந்து நம்மை போல் உள்ளவர்கள் படிப்பதற்கு கல்லூரி உருவாக்க வேண்டும். அதன் மூலம் தான் இந்த கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. குறுகிய செலவு என்று சொன்னார்கள். ஆனால் அதிக செலவு ஆகிவிட்டது வங்கியில் கடன் வங்கி கடன் அதிகமாகி ஏலத்திற்கு மூன்று முறை இந்த கல்லூரி வந்துவிட்டது.
இன்னொரு இடத்தில் கடனை வாங்கி அதனை அடைத்து உருவாக்கினோம். கல்லூரியை அப்போது ஆளுங்கட்சியாக முதலமைச்சராக இருந்தவரின் தொகுதி இக்கல்லூரிக்கு அருகே இருந்த தொகுதி. தேர்தல் பணியில் எங்களுக்கும் அவருக்கும் சங்கடம்.அதனால் பத்து பதினைந்து ஆண்டுகாலம் முழுமையாக இக்கலௌலூரியை வளர்வதற்கு விடவே இல்லை. இன்றைக்கு தான் கல்லூரி துளிர்த்து இருக்கிறது.
இந்த கல்லூரி நாங்கள் சொந்த லாபத்துக்காகவும் இதிலிருந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கவில்லை. இப்போது மக்களுக்கு குறைவான செலவில் படிக்க வைக்க முடியுமோ என்பதை வைத்து நடத்தி வருகிறோம். அதே இராமஜெயம் இந்த கல்லூரிக்காக மாருதி மருத்துவமனை அமைத்துக் கொடுத்தார். அதில் பணிபுரியும் செவிலியர்களுக்காக இங்கே ஒரு செவிலியர் கல்லூரியில் தற்பொழுது தொடங்கி நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த கல்லூரிக்கு அனுமதி அளித்தார்கள் என்று அமைச்சர் நேரு பேசினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments