பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று(23.09.2025) தொடங்கியது, ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி பல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் வலம்வந்து கொலுமண்டபம் வந்தடைந்தார், அங்கு தாயாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி எனப்படும் தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ரெங்கநாயகி தாயார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் இரவு ஸ்ரீரங்கம் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் ரெங்கநாயகி தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வழிபாடு செய்தது.
கோவில் யானைகளின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்புடன் கண்டு ரசித்துச் சென்றனர். நவராத்திரி விழாவில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments