Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலவச மலைப்பயிர் மற்றும் இயற்கை விவசாயப் பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில்
1000 தலைப்பின்கீழ், தோட்டக்கலை
பயிற்சியாளர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற மலைப்பயிர்கள் துறை மற்றும் தமிழ்நாடு திறன்
மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம் அமைத்தல், நாற்றங்கால் அமைப்பு, பசுமைக்குடில் இயக்குதல், இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி தோட்டக்கலை பயிற்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம், மாதவரம், சென்னை மாவட்டம், கொய் மலர்களுக்கான மகத்துவ மையம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காய்கறிகளுக்கான மகத்துவ மையம், ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் விவசாயி பயிற்சி நிலையம், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் போன்ற நிலையங்களில் நடத்திட திட்டப்பமிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்சம் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருப்பதால் பயிற்சி வழங்கும் இடத்தில் இலவசமாக தங்கி படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி முடிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பயிற்சி திட்டத்தில் இணைய விரும்பும் பயிற்சியாளர்கள் அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *