திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த அலுவலகத்தில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியிலிருந்த 1 ஆம் எண் இணை சார்பதிவாளர் அப்துல் காதர் என்பவரிடமிருந்து கணக்கில் வராத சுமார் ரூ.53,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணம் எப்படி அங்கு வந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சோதனையால் இணைப்பதிவாளர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments