ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி-24 அன்று. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஓவியங்கள், கவிதைகள்,

மற்றும் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருத்தல், போன்றவற்றில் ஈடுபட்டு வீர தீர செயல்புரிந்த 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட(31-டிசம்பர் படி) பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது. விளையாட்டு, தற்காப்பு கலை போன்றவற்றில் பரிசுகள் பெற்றால் மட்டும் போதாது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியிருத்தல் வேண்டும்.

அவ்வாறான தகுதியுடையோர் தாம் ஆற்றிய சிறப்பான பங்களிப்பினை தெளிவாக கருத்துருக்களாக பதிவு செய்து தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பம் செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்த கருத்துக்களை கருத்துருக்களாக Spiral பைண்டிங் செய்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தலா இரண்டு தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். Spiral பைண்டிங்-ல் கருத்துருக்கள் அளிக்கப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

இணையதளத்தில் விண்ணப்பம் செய்திட கடைசி நாள்: 15 நவம்பர் 2025 அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments