தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று (25.09.2025) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை 4:00 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் வெயிலின் உக்கிரத்திற்கு ஆட்பட்ட பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாநகர் பகுதிகளான பாலக்கரை, மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், மார்க்கெட், விமான நிலையம், கே.கே.நகர், கண்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துறையூர், வயலூர், சோமரசம்பேட்டை, துவாக்குடி, ஆகிய பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments