திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வைணவ கோவில்களில் பிரசித்திபெற்றதாகும்.திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோவிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவம் தேர்திருவிழா 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 2-ம் நாளான இன்றைய தினம் பிரசன்ன வெங்கடாஜலபதி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் காட்சியளித்தார்.அங்கு கும்ப தீபாராதனைக்குப் பிறகு வெளிபிரகாரங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதிஉலாவந்து சேவைசாதித்தார்.
திருவீதி உலாவின் போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற அக்டோபர் 02- ம்தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments