நீலகிரியில் நடைபெற்ற அதிமுக பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தரை குறைவாக பேசியதாக கூறி தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
அதேபோல திருச்சி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விச்சு (எ) லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து ஊர்வலமாக சென்று மெயின்கார்டு கேட் அருகே எடப்பாடியின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்தனர்
இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் உருவ பொம்மையை பறித்து சென்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments