திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 3 மின்சார மயானங்கள் உள்ளது. இதில் 2 மின்சார தகன மேடைகள் கோவிட் தொற்றால் மரணமடைந்தவர்களுக்கு தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு கடந்த 10 நாட்களாக கோவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசின் அதிகார அறிவிப்பு படி தினமும் பதினைந்து பேர் வரை உயிரிழக்கின்றனர். இது மட்டுமில்லாமல் அவருடைய உடல்கள் முறையாக பாதுகாப்பாக உறவினரிடம் ஒப்படைக்கவும் காலதாமதமாகிறது. பிறகு அனைவரும் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் பொழுது அங்கே வரிசையில் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஒரு உடலை தகனம் செய்வதற்கு நேரம் ஆகிறது. 24 மணி நேரமும் தகனமேடை உள்ள பணியாளர்கள் பணியாற்றி வேண்டிய நிலையில் உள்ளனர். திருச்சி மாநகராட்சி மின்சார தகன தனியாரிடம் மேடைகளை டெண்டர் விட்டு உள்ளனர். இந்த மின்சார தகன மேடை டெண்டர் எடுத்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வரும் பொழுது அவர்களிடம் 2100 ரூபாய் என நிர்ணயம் செய்து அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது.

ஆனால் அதையும் தாண்டி 3500 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முழு தொகையான 5500 ரூபாய் கட்டணத்தை கட்டினாலே உடல்களை தகனம் செய்ய மற்ற நடைமுறைகளை செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக கோணக்கரை தகன மேடை டெண்டர் எடுத்தவரிடம் கேட்டபோது இது தொடர்பான புகார் வந்தது.

அந்த புகாரை சரி செய்து ஆட்களை மாற்றி உள்ளோம் என குறிப்பிட்டனர். ஆனால் மீண்டும் கோணக்கரை தகன மேடையிலும் ஓயாமரி மின் மயான மேடையிலும் தொடர்ந்து இதுபோல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே கோவிட் தொற்றால் தங்களது சொந்தங்களை இழந்தவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.

கோவிட் தொற்று வந்தவுடன் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது மிகப்பெரிய கடினமாக இருக்கிறது. அதையும் தாண்டி ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிக்கு அதை எல்லாம் தாண்டி அவரை காப்பாற்ற முடியாமல் போன பிறகு அவருடைய உடலை தகனம் செய்யவும் கூடுதல் கட்டணம் என உறவினர்களை இழந்தவர்கள் கதறி அழும் காட்சி காண்போரை மனமுடைய செய்கிறது. தற்போதும் மீண்டும் இந்நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு உடனடியாக மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           132
132                           
 
 
 
 
 
 
 
 

 23 May, 2021
 23 May, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments