இன்று (29.09.2025) காலை 8:00 மணியளவில், திருச்சி, ஹோட்டல் ரம்யாஸ் கூட்டரங்கில், CII – Confederation of India Industry ஏற்பாடு செய்திருந்த Connect Trichy 2025 என்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.
அப்போது, திருச்சியை தமிழ்நாட்டின் வலிமையான தொழில் மையமாக மாற்றுவதற்கான எனது பார்வையை வெளிப்படுத்தினேன்.இந்நிகழ்வில், தொழில்துறைத் தலைவர்கள், தொழில் முனைவோர்கள் பலர் பங்கேற்றனர்.
சிறந்த போக்குவரத்து இணைப்பு, முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் வலுவான தொழில்த்துறை நிருவனங்களுடன் திருச்சியின் அமைவிடம், தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக உள்ளதை எடுத்துரைத்து, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு நான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விவரித்தேன். இது, ஏற்றுமதியை எளிதாக்கி, வேளாண் மற்றும் தொழில் துறைகளுக்கு உலகலாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தேன்.
மேலும், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் G-கார்னரில் உயர்மட்டச் சுழற்சாலை, அணுகு சாலை அகலப்படுத்துதல், சஞ்சீவி நகர் மற்றும் கொள்ளிடம் Y-கார்னரில் சுரங்கப்பாதை அமைத்தல், ESIC மருத்துவமனை மேம்பாடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடக்கம் மற்றும் இரயில்வே துறை கட்டுமானங்கள் உள்ளிட்ட எனது முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டேன்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தல அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்துரைத்தேன்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் Global Capablity Centres (GCC) ஈர்ப்பது ஆகியவற்றின் மூலம் திருச்சியை தொழில்நுட்ப மற்றும் சேவை மையமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நான் அழைப்பு விடுத்தேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments