தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆற்று நீர் மேலாண்மையும், ஆற்றங்கரையில் அடர்வனம் வளர்ப்பு ஐந்தாண்டுத் திட்டம் (integrated river water management and river bank afforestation Five Year Plan) பிரச்சாரத் திட்டம்.
38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனு
அளித்தல், சென்னையில் மாநிலம் தழுவிய கோரிக்கை மாநாடு நடத்துதல்.காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் புவி வெப்பமடைதல் தழுவல் (Climate adaptation) உத்திகளில் திட்டமிட்ட ஆற்று நீர் மேலாண்மையும் – ஆற்றங்கரையில் அடர்வனம் வளர்ப்புத் திட்டமும் ( Planned river water management and river bank afforestation projects) மிகுந்த பலனளிக்கும்.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் ஏனைய நீர்நிலை மேம்பாட்டு அமைப்புக்கள், நிதி வழங்கும் நிறுவனங்கள், தொழில் – வர்த்தக நிறுவனங்கள், தன்வந்தர்கள் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் பங்கேற்புடனும் தமிழக அரசுக்கு முன்வைக்கும் ஐந்து கோரிக்கைகள்.கோரிக்கை-1: தமிழக அரசு அறிவிப்பின்படி நமது மாநிலத்தில் காவிரி, தென் பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, வெள்ளாறு, கெடிலம், நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட 17 அறிவிக்கப்பட்ட ஆறுகள் உள்ளன, இவை நீர்வளத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்காக 34 ஆற்று நீர்ப்படுகைகளாக மாநில நீர்வளத்துறை அட்டவணைப் படுத்தி உள்ளது. இந்த அனைத்து ஆற்றங்கரையிலும் யூகலிப்ட்ஸ், தேக்கு போன்ற ஓரினமரம் வளர்ப்புக்கு மாற்றாக பல்வகை மரங்கள் அடங்கிய அடர்வனங்களை உருவாக்க வேண்டும்.
கோரிக்கை-2: அனைத்து ஆறுகளில் நேரடியாக கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற சாக்கடைக் கழிவுகளை முழுமையாக தடுப்பதற்கு கழிவு நீர் மாற்று மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும்.
கோரிக்கை-3: ஆறுகளுக்குள் முளைத்து நிற்கும் முற் புதர்கள், அயலினத் தாவரங்கள், குப்பை கூலங்களை அடியோடு அகற்றி, கடந்த அறுபது-எழுபது ஆண்டுகளாக சிதைந்து போன நமது ஆறுகளின் அங்க அடையாளங்களை மீட்டெடுக்கும் நிரந்தரத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.கோரிக்கை-4: அனைத்து ஆறுகளின் நீர்வரத்து மற்றும் நீரப்போக்கு வழித்தடங்களில் உள்ள சட்டத்தை மீறிய தடுப்புக்களைத் தகர்த்து, ஆறுகளின் நீர்வளப் பெருக்கத்திற்கு உகந்த புவியமைப்பு தழுவிய
(gravitational Flow) நீரோட்ட பெருக்கத்திற்கு வழிவகுப்பதுடன் 200 TMC கொள் அளவுக்கு புதிய ஏரிகள் – குளங்கள் தோண்ட வேண்டும்.
கோரிக்கை-5: இந்திய அரசின் நீர்வளத்துறையுடன் இயங்கும் மண் மற்றும் நில உபயோக நிறுவனம் (Soil and Land Use Institute) தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (Tamil Nadu Agricultural University) இணைந்து தயாரித்துள்ள (Micro watershed Atlas) குறுவடிநிலப் பகுதிகள் அடங்கிய
அட்டவணைப்படி (Micro watershed Atlas) தமிழ்நாட்டின் எல்லைப்
பகுதிக்குள் சுமார் 18,568 குறுவடிநிலப் பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் ஏறத்தாழ 20% அழிந்து போனவை எனக் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள சுமார் 14,000 குறுவடிநிலப் பகுதிகளை 12,524 கிராம ஊராட்சிகளில் இயங்கும் நூறுநாள் வேலைத் திட்ட (MNREGA) பயனாளிகள் மூலம் சீர் செய்து ‘நீர் மற்றும் நிலவள மேலாண்மைத் தொடர் திட்டத்தை’ உரிய அரசு ஆணை பிறப்பித்து செயல்படுத்த வேண்டும்.
நமது தமிழ்நாடு மாநில அரசு போராடி, கேரளாவில் இருந்து முல்லைப் பெரியார் நீரையும், கர்நாடகத்தில் இருந்து காவிரி மற்றும் தென்பெண்ணை நீரையும், ஆந்திராவில் இருந்து பாலாற்றின் நீரையும் பெற்று அதை உரிய நீர் நிர்வாக கட்டமைப்புகளுடன் பாதுகாத்து நமது மக்களும் மண்ணும் பயனுறும் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளும், நமது மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் 34 ஆற்றுப்படுகைப் குழுமங்களும் பயன்பெறுமாறு செயல்பட வேண்டும்.
நமது மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட சுமார் 38,000 நீர் நிலைகளுக்கும் நீராதாரத்தை வழங்கி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கின்றன.
நமது மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை சரி சமநிலையில்
நிலை நிறுத்தவும் கடற்கரை
மாவட்டங்களில் கடல் நீர்
உள்வாங்குவதை தவிர்க்கவும் ஏற்கனவே உள்ள நீர்நிலைகளின் முழுக் கொள்ளவை நிலைநிறுத்தவும் கூடுதலாக 200 TMC கொள்ளவுக்கு புதிய நீர் நிலைகளை அடுத்துவரும் நிதியாண்டில் உருவாக்கும் திட்டமும்
நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள நீர்வளப் பெருக்கத்திற்கு உகந்த வகைகளில்
ஒவ்வொரு மாவட்டத்தின் தேவையையும் நீராதார
இருப்பையும் கணக்கிட்டு தாமதமில்லாத செயல்த் திட்டத்தை மாவட்ட வாரியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்திற்கான, அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள், அரசு செயல்பாட்டு நெறிமுறைகளில் (அரசியல் சட்டத்தின் பகுதி III & பகுதி IV) மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் தமிழக அரசின் நீர்வழி, நீர்நிலைப் பாதுகாப்பு சட்ட விதிகளில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள
இக்கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு ஐந்தாண்டு தொடர் திட்டமும் அதற்குரிய நிதி ஒதுக்கீடும் செய்யும் முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இத்திட்டம், புவிவெப்பமயமாதலை தாக்குப் பிடிக்கவும், தமிழகத்தின் எதிர்கால நீர்த் தேவையை பூர்த்தி செய்யவும் அத்தியாவசியம் ஆகும்.
இக்கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்த்து செயல்படுத்தவும், பொது மக்களும், தொழில் வர்த்தகப் பெருமக்களும் நாட்டு நலம் நாடும் இத்திட்டத்தை ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு 29.09.2025 திங்கட்கிழமை காலை 12:00 மணி அளவில் காவிரி கரை அம்மா மண்டபத்தில் இருந்து
தமிழக ஆறுகள் வளம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் எடுத்த முயற்சிக்கு கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments