திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 30.09.2025 நடைபெற்றது.இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி. மேலும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் இறந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்துவோம் என கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments