திருச்சியில் தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் இரண்டாவது ஆண்டாக ஜோனல் மட்டத்தில் நடைபெற்றது. மொத்தம் 7 மாவட்ட அணிகள் பங்கேற்றன. திருச்சியிலிருந்து இரண்டு அணிகள், மேலும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட அணிகள் இதில் கலந்து கொண்டன.
கடந்த மூன்று நாட்கள் (செப்டம்பர் 28, 29, 30) நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (30.09.2025) நடந்தது. இதில் தலைமை விருந்தினராக பாஸ்டன் இ-காமர்ஸ் நிறுவனம் எம்.டி. பிராங்க் ரஃபேல், ஜமால் முகமது கல்லூரி விடுதி இயக்குநர் முகமது ஃபாசில், அண்ணா பல்கலைக்கழக பி.டி., பிஷப் ஹீபர் கல்லூரி பி.டி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹாக்கி செல்வர் கார்த்தியும் கலந்து கொண்டார்.
மூன்று நாள் நீடித்த லீக் கம் நாக்அவுட் போட்டியில் திருச்சி காஜாமியான் பள்ளி முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை அரியலூர் மான்போர்ட் பள்ளி பெற்றது. மூன்றாம் பரிசை நாகப்பட்டினம் அணி வென்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments