திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி
சித்தாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அதேபோல் மதுவுக்கு அடிமையான
ரவிக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு தனது மூன்று வயது மகளை வெளியே அழைத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் தங்க வைப்பதாகவும், பின்னர் சமாதானத்திற்கு பிறகு குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14ம் தேதி வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்து வீட்டை விட்டு தனது மூன்று வயது மகளுடன் வெளியேறிய ரவிக்குமார் குழந்தையை நீண்ட நாட்களாக வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டதற்கு நண்பர் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரவிக்குமாரின் மனைவி பூக்கடை சாகுலிடம் சென்று தனது மகளை திருப்பி அனுப்பும்படி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உங்களது மகள் என்னிடம் இல்லை. நீங்கள் குழந்தையை வளர்க்க கஷ்டப்படுகிறீர்கள் என்றும் உங்களது நடத்தை மீது சந்தேகம் உள்ளதாகவும், அதனால் அந்த குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுக்கும் படி உங்களது கணவர் ரவிக்குமார் என்னிடம் கூறினார். அதன்படி அந்தக் குழந்தையை வேறொருவருக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனது குழந்தையை யாரிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு முழுமையான தகவல்களை அவர் தெரிவிக்க மறுத்துள்ளார். இதன் பின்னர் பெண் குழந்தையின் தாயார் தன்னிடமிருந்து தனது கணவர் ரவிக்குமார் அழைத்துச் சென்ற தனது மகளை மீட்டு ஒப்படைக்குமாறு கணவர் ரவிக்குமார் மற்றும் பூக்கடை சாகுல் ஆகிய இருவர் மீது கடந்த 27ம் தேதி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கணவர் ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில்
ரவிக்குமார் அதே பகுதியில் வசிக்கக்கூடிய பூக்கடை சாகுல் என்பவரிடம் தனது மகளை ஒப்படைத்துள்ளதாகவும் , அவர் தனது மகளை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் பூக்கடை சாகுல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ரவிக்குமார் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் உள்ளதாகவும் அவள் குழந்தையை சரியாக வளர்க்க மாட்டார் எனக் கூறி தன்னிடம் அந்த குழந்தை ஒப்படைத்து வேறு யாருக்காவது தத்து கொடுக்கும்படி ரவிக்குமார் கூறியதாக தெரிவித்தார். மேலும்
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த முருகன் சண்முகவள்ளி தம்பதியினருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது அவர்கள் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டதாகவும் சாகுலிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு சாகுல் ரவிக்குமாரின் மகளான மூன்று வயது சிறுமியை முருகன் சண்முகவள்ளி தம்பதியினருக்கு ரூபாய் 50 ஆயிரத்துக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது.
குழந்தையை விற்று பெறப்பட்ட 50 ஆயிரத்தில் ரூபாய் 15 ஆயிரத்தை சிறுமியின் தந்தையான ரவிக்குமாருக்கு கொடுத்ததாகவும் சாகுல் விசாரணையில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரவிக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது தான் பணத்தை பெறவில்லை என்றும், தனக்கு தினந்தோறும் மது அருந்த சாகுல் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
விசாரணையில் கிடைத்த தகவலின்படி முருகன் சண்முகவள்ளி தம்பதியினரிடம் விசாரணை நடத்திய போது திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியதாகவும் அப்போது பூக்கடை சாகுல் மூலம் இந்த குழந்தை கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
அதே போல் அவர்கள் அந்தக் குழந்தையை நன்கு பராமரித்து தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வளர்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து
முருகன் சண்முகவள்ளி தம்பதியினரிடம் சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்கு விற்ற பூக்கடை சாகுல், சிறுமியின் தந்தை ரவிக்குமார், சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய முருகன் சண்முகவள்ளி தம்பதியினர் ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments