திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் மையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை, பி.எஸ்.என்.எல் 25வது சில்வர் ஜூப்ளி விழா கோலாகலமாக கொண்டாடி பேரணி நடைபெற்றது.
முதன்மை பொது மேலாளர் ரவிக்குமார் தலைமையில், ஓய்வு பெற்ற ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு பாரம்பரியத்தை கொண்டாடினர்.
விழாவை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் பெண் ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை பொது மேலாளர் ரவிக்குமார்,
கடினமான காலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் அளித்த நம்பிக்கைக்கும், ஊழியர்கள் செய்த தியாகத்திற்கும் நன்றி தெரிவித்தார். பி.எஸ்.என்.எல் ஒருபோதும் தோல்வியடையாது என்பதை ஊழியர்களே நிரூபித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 4ஜி சேவைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் முழுவதும், குறிப்பாக பச்சைமலை போன்ற பகுதிகளில் அதிகளவு தொலைத் தொடர்பு டவர்களை நிறுவியுள்ளோம்.
கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு நெட்வொர்க்கில் இருந்து மீண்டும் எங்கள் சேவையை அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தி வருவதை நாங்கள் பார்க்க முடிகிறது
5ஜி சேவைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன, விரைவில் 5ஜி அறிமுகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments