திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் முன்னிலையில் இன்று (03.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட இராஜா காலனியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 250 கல்லூரி மாணவியர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என 34,811 சதுரஅடி பரப்பளவில் 43 அறைகளுடன் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், இதே போல் 350 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் என 43907 சதுரஅடி பரப்பளவில் 58 அறைகளுடன் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் முன்னிலையில் இன்று (03.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருச்சிராப்பள்ளி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 புதிய வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் முன்னிலையில் இன்று (03.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார், தாட்கோ செயற்பொறியாளர் அ.நவநீதகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் பிரகாஷ் (மேற்கு), தனலட்சுமி (திருவெறும்பூர்), அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments