திருச்சி, அக்டோபர் 3, 2025 – திருச்சி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரமாண்டமான ‘லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் எக்ஸ்போ’ (Lifestyle Shopping Expo) இன்று கலைஞர் அறிவாலயத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. Classy Events மற்றும் Rotary Club of Trichy Diamond City Elite ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை அக்டோபர் 5 வரை நடத்துகின்றன.மங்கல விளக்கேற்றும் நிகழ்வுடன் துவங்கிய இந்தத் தொடக்க விழாவிற்கு, அமைச்சர் K.N. நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
Rotary மாவட்டம் 3000-த்தின் ஆளுநர் Rtn. R.B.S. மணி அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், Inner Wheel மாவட்டம் 321-ன் மாவட்டப் பொருளாளர் மீனாட்சி வெள்ளையன் அவர்கள் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.விழாவில், Classy Events நிறுவனர் Rtn. T. சுப்ரமணியன், பப்ளிக் இமேஜ் தலைவர் Rtn. பிரியா கோவிந்தராஜ், உதவி ஆளுநர் Rtn. சுபா பிரபு, Rotary Club தலைவர்கள் Rtn. M. ஜோசப் ராஜ் மற்றும் Rtn. S. ஹில்டா சகாயமேரி நித்யா, Inner Wheel தலைவி மார்கரெட் ஜோசப் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மூன்று நாட்கள் கண்காட்சி லைஃப்ஸ்டைல் எக்ஸ்போவில், ஆடைகள், நகைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பலவகையான தயாரிப்புகள் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த கண்காட்சி இன்று அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி, வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை (மூன்று நாட்கள்) நடைபெற உள்ளது. ஷாப்பிங் பிரியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments