சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் (வயது 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்வதற்காக கடந்த மாதம் 13-ந்தேதி ஒரு காரில் தங்கக்கட்டிகளுடன் வந்தார். அந்த காரில் அவருடன் டிரைவர் மற்றும் கடை ஊழியர் ஒருவர் இருந்தனர்.
திண்டுக்கல்லில் ஒரு நகைக்கடையில் குறிப்பிட்ட அளவு தங்கக் கட்டிகளை கொடுத்துவிட்டு மீதமிருந்த சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்தி 3 பேரும் கீழே இறங்னர்.
அப்போது அந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரில் வந்தவர்கள் குணவத் உள்ளிட்ட மூன்று பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, காரில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து விட்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து குணவத் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் சமயபுரம் ரகுராமன், காணக்கிளியநல்லூர் கருணாகரன், ஜீயபுரம் ஜீயபுரம் குணசேகரன் ஆகிய மூன்று ஆய்வாளர்கள், காவலர்கள் 35பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா ,குஜராத் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் முகாமிட்டு இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய பிரதேசத்திற்கு விரைந்த சென்ற போலீசார், அவர்களை
கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்தானின் ஜோத் மங்கிலால் தேவாசி (22) பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் விக்ரம் ஜாட் (19) என்பது தெரியவந்தது.
மேலும் மர்ம நபர்கள் மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில் மத்திய பிரதேசத்தின் பர்வானிக்கு செல்லும் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து அந்த மர்ம நபர்களுக்கு தெரியாமல் அந்த பேருந்தில் ஏறி 2 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்க நகைகள் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
மூன்று கிலோ தங்கத்தை 11 தங்க கட்டிகளை (2.412kg) உருக்கி விட்டனர்.
அதில் 500 கிராம் தங்கத்தை உருக்கியவருக்கு கொடுத்து விட்டனர். இதில் வந்த பணம் 11 லட்சம் ரூபாயை அரியானா பகுதியில் வறுமையில் இருக்கும் மக்களுக்கு தானமாக கொடுத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்ககங்கள் விபரம்:
11 தங்க பிஸ்கட் – எடை 2 கிலோ 412 கிராம், 176 தங்க வளையல்கள் – எடை 3 கிலோ 482 கிராம், தங்க மோதிரங்கள் – எடை 646 கிராம், தங்க செயின்கள்/கைக்கொடிகள் – எடை 853 கிராம் கைப்பற்ற நகைகள்.
கடந்த 25 நாட்களாக வெளி மாநிலங்களில் தங்கி கடுமையான இன்னல்களை தாண்டி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விரட்டி வட மாநில கொள்ளையர்கள் பிடித்துள்ளனர். இதில் மிகவும் கொடூரமான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை திருச்சி தனிப்படை காவல்துறையினர் ஸ்கெட்ச் போட்டு தட்டி தூக்கி கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் பாபோ தமிழக போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மங்கிலால், தேவாசி மற்றும் விக்ரம் ஜாட் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து தகவல்களையும் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments