எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில், எனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்களின் திறப்பு விழா, இன்று (06.10.2025) நடைபெற்றது.
காலை 9:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 6 திட்டங்கள் திறக்கப்பட்டன.அவை, மூன்று நியாய விலைக் கடைகள், இரண்டு குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் ஆகும்.
இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 75 இலட்சம்.
மண்ணார்புரம், சுப்பிரமணியபுரம், காஜாபேட்டை, வரகநேரி முஸ்லிம் தெரு, அண்ணாநகர், கருவாட்டுப்பேட்டை, KK நகர் பர்மா காலனி ஆகிய பகுதிகளில் இத்திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மாலை 5:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 4 திட்டங்கள் திறக்கப்பட்டன. அவை, ஒரு நியாய விலைக் கடை, ஒரு பயணியர் நிழல் கூடை, ஒரு சீரணி அரங்கம் மற்றும் இரு உயர் கோபுர மின்விளக்குகள் ஆகும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 43.4 இலட்சம் ஆகும்.நாவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி, துவாக்குடி நகராட்சி ரவுதான் மேடு பெல் நகர் இணைப்பு சாலை தெற்கு பகுதி, அரசு கலைக் கல்லூரி அருகில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உழவர் சந்தை அருகில் இவை திறந்து வைக்கப்பட்டன.
இரு நிகழ்வுகளிலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ், திமுக மாநகரக் கழகச் செயலாளரும் மண்டலக் குழு தலைவருமான மு. மதிவாணன் எம்சி, திட்ட இயக்குனர் திருமதி கங்கா தரணி, இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்களின் நீண்டநாள் தேவைகள் நிறைவேறியதில் பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments